சத்துணவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Loading

திருவள்ளூரில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கையை வலியுறுத்தி குலவையிட்டு, கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் காத்திருப்பு போராட்டம் :

திருவள்ளூர் பிப் 08 : திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் காலமறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் குலவையிட்டு கும்மியடித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு நிகரான ஊதியமும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையினான ஊதியம் என காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணி முடிந்து தகுதியான சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியில் அமர்த்த வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குலவையிட்டு கும்மியடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சடலம் கிடத்தி ஒப்பாரி வைக்கும் நூதன முறையிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
0Shares