அதிமுக எடப்பாடியார்கோப்பை 2026 கிரிக்கெட்போட்டி

Loading

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடியார் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி : வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கி பாராட்டினார் :
திருவள்ளூர் பிப் 07 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எஸ்என்எம் ஸ்போர்ட்ஸ் மற்றும் எடப்பாடியார் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி இன்று இறுதி போட்டி நடைபெற்றது. 24 அணிகள் கலந்து கொண்ட போட்டியை முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்த நிலையில் போட்டிகள் இன்று நிறைவு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.பி.எம். எழிலரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் புங்கத்தூர் தேவா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கினார்.
அதேபோல் ஆல் ரவுண்டர், அதிக ரன்கள் எடுத்தவளர், அதிக விக்கெட்டை வீழ்த்திய வர்களுக்கு கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். இதில் பூண்டி ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி எஸ். மாதவன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.
0Shares