புதுச்சேரி உப்பளம் தொகுதியில் சிமெண்ட் சாலை
![]()
புதுச்சேரி பிப்-6
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் சிமெண்ட் சாலை பணிகளுக்கான பூமிபூஜை- அனிபால் கென்னடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில், 1-ஆம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் தெருவில், வடிகால் வசதிகளுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்தப் பணியை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் தலைமையேற்று துவக்கி வைத்தார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம், அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான ஒப்பந்தத் தொகை ரூ.12,68,631/- ஆகும். இந்தத் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025–26) கீழ் மேற்கொள்ளப்படுகிறது. பணிகள் முழுமையாக நிறைவேறுவதற்கு நான்கு மாதங்கள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை மற்றும் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதன் மூலம், மழைக்காலங்களில் ஏற்படும் நீர் தேக்கம் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் குறையும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம் , ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஒப்பந்ததாரராக ராஜேஷ் , தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ், கழக சகோதரர்கள் செழியன், அகிலன், தியாகு, விஷ்ணு, ரகுமான் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

