நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்
![]()
நீலகிரி மாவட்டம்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் பந்தலூர் மற்றும் கார்மேல் ஷாலோம் சாரிட்பிள் டிரஸ்ட் சேரம்பாடி ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தின.
இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
சுகாதார ஆய்வாளர் கையேந்திரன், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், கார்மேல் ஷாலோம் சாரிட்பள் டிரஸ்ட் இயக்குநர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதுநிலை கண் மருத்துவர் சரண்யா, கூடலூர் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் தாவா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த முகாமில் 130க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
இதில் 45 பேருக்கு கண்புரை பாதிப்பும், 5 பேருக்கு கண் சதை வளர்ச்சி இருப்பது கண்டறியபட்டது. இதில் முதற்கட்டமாக அறுவை சிகிச்சைக்கு 20 பேர் தேர்வு செய்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியில் செவிலியர் கீதா ஆஷா பணியாளர் நௌசந்தி, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி பாக்யா மற்றும்
நுகர்வோர் மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

