அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க பொதுக்குழு
![]()
அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க பொதுக்குழு கூட்டம்
அருவங்காடு பகுதியில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தை தலைவர் முபாரக் மற்றும் பொதுசெயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து வியாபாரிகளும் பங்கேற்றனர். வியாபாரிகளின் சுகம் மற்றும் துக்க நிகழ்வுக்கான பொருட்கள் நாற்காலிகள் மின்விளக்குகள் தார்பாலின், ஸ்ட்ச்சர்கள், மற்றும் பொது தேவைக்கான, பொருட்களை வியாபார உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஒப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அனைத்து வியாபாரிகளும் பயன்படும் வகையில் பொருட்கள் இலவசமாக தரப்படும் என முடிவெடுக்கப்பட்டது,மேலும் வரும் காலங்களில் நல வாரிய திட்டங்கள் வியாபாரிகளுக்கு ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது. விழாவின் ஏற்பாடுகளை பொருளாளர் சண்முகம்,சங்க நிர்வாகிகள் வில்சன்,அமுல், அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

