கோவையில் நான் யார் தெரியுமா? அதிரவைத்த ஒரு நபர்

Loading

கோவை
கோவையில், நான் யார் தெரியுமா?” என அதிகாரிகளையே அதிரவைத்த ஒரு நபரின் செயலுக்கு மாநகராட்சி நிர்வாகம் வைத்த முதல் செக்.  கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டதுடன், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சொகுசு மதில் சுவர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் தரைமட்டமாக்கினர். 
கோவை சரவணம்பட்டி, மீனாட்சி நகர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 50 சென்ட் ‘ரிசர்வ் சைட்’ நிலம் உள்ளது. இந்த நிலத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த நபரான சிவஞானம் என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தார். அரசு நிலத்தைச் சுற்றி பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்பி, அதனைத் தனது வீட்டின் ஒரு பகுதியாக மாற்றி, உள்ளே ஒரு சொகுசு பூங்காவையும் அமைத்திருந்தார்.
சிவஞானம் தன்னை ஒரு செல்வாக்குமிக்க அரசியல் பிரமுகராக அந்தப் பகுதியில் காட்டிக்கொண்டுள்ளார். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போதெல்லாம், கட்சி மேலிடத்தில் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறி மிரட்டி வந்துள்ளார்.
குறிப்பாக குருவாயூர் கோவிலுக்குத் தங்கக் கிரீடம் வழங்க ஏற்பாடு செய்ததே நான் தான்” என்றும் கூறி அதிகாரிகளை நிலைகுலைய வைத்துள்ளார். இந்த நிலையில் மாநகராட்சி சொத்துகள் பற்றி அறிந்த
மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் யார் என்ன சொன்னாலும் அதிகாரிகள் அடி பணிய கூடாது. அவை அரசின் சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்கு துணை போக கூடாது என  அதிரடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிரம்மாண்ட ஜே.சி.பி எந்திரம் கொண்டு, பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மதில் சுவர்கள் மற்றும் நுழைவு வாயிலை  இடித்து தள்ளினர்.
சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 சென்ட் நிலம் மீட்கப்பட்டு, உடனடியாக கம்பி வேலி அமைக்கப்பட்டது.
அந்த நிலத்தில் “இது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்” என்ற அறிவிப்புப் பலகை நடப்பட்டது.
அரசியல் பெயரையோ, மேலிடத்துத் தொடர்பையோ சொல்லி அரசு நிலத்தை அபகரிப்பவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்,” என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0Shares