சிவாஜிகாலனிகுடியிருப்போர்சங்கம்சமத்துவபொங்கல்
![]()
கோவை
கோவை மாவட்டம் தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில், சிவாஜி காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்த பகுதியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில் சிவாஜி காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக ஆண்டு தோறும் பொங்கல் விழா கொண்டாட படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு அனைத்து பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டு கொண்டாடும் ஒரு விழாவாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக 34வது வார்டு கவுன்சிலர் மாலதி முன்னிலை வகித்தார். சிவாஜி காலனி குடியிருப்போர் நலச் சங்க தலைவர் லயன் டாக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சிவாஜி காலனி, சிவாஜி காலனி விரிவாக்கம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, மகிழ்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து கவுன்சிலர் மாலதி அப்பகுதி பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் கலந்து கொண்டு சிறப்பான முறையில் சமத்துவ பொங்கல் வைத்த மகளீர் களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் சிவாஜி காலனி குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், ஆனந்தன், கேசவன், ஈஸ்வரன், ரமேஷ் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவினை உற்ச்சாகமாக நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

