கல்லூரி மாணவமாணவியர் பொங்கல்வைத்துவழிபாடு
![]()
கோவை
கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.. கல்லூரி மாணவ மாணவியர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. அழிந்து வருகின்ற கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை மீட்கும் வகையில் இம்மையம் செயல்படுவதன், கைத்தறி நெசவு முறைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் இம்மையத்தில், பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இதில், கல்லூரி மாணவ மாணவியர்கள் பொங்கல் வைத்து, தமிழர்களின் பாரம்பரிய குலவை சத்தமிட்டு, ஆடிப்பாடி கொண்டாடி, சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மகிழ்ந்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல், உரி அடித்தல், உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை மாணவ மாணவியர்கள் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சில்க் வில்லேஜ் நிறுவனத்தின் நிறுவனர் கைத்தறி முருகேசன், பழனிவேல், ஆலோசகர் ராஜாராம் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவர்களின் பொங்கல் விழாவினை ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

