கோவையில் அய்யன் திருவள்ளுவர் தினவிழா

Loading

கோவை
தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட வள்ளுவர் குல மக்கள் இணைந்து நடத்திய ஒற்றுமை திருவிழா திருவள்ளுவர் தினம் நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
கோவை தடாகம் சாலை, சுண்டபாளையம் சாலையில் அமைந்துள்ள சக்தி முத்து மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில், தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட வள்ளுவர் குல மக்கள் இணைந்து நடத்தும் 2026ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் தினம் பொங்கல் விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றது.
இதில் ஜோதிடர் முருகானந்தம் வெள்ளிங்கிரி தலைமையில்
சிறப்பு விருந்தினராக தமிழ் அமுதம் புலவர் புலியகுளம் அய்யாச்சாமி கலந்து கொண்டு, திருவள்ளுவர் திருஉருவ படத்திற்க்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சபா.கார்த்திகேயன்  வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து திருவள்ளுவருக்கு படையலிட்டு, பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அருண் கோபால் கூறியதாவது.. வான் புகழ் கொண்ட ஐய்யன் திருவள்ளுவர் அவதரித்த நாள் இன்று எனவும், இதனை திருவள்ளுவர் தினமாக நாடு முழுவதும் கடைபிடித்து வருவதாகவும், இந்த நாளில் எங்களது அமைப்பு சார்பாக ஆண்டு தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும், பொங்கல் வைத்து ஐய்யன் திருவள்ளுவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இந்த நாளின் மகத்துவத்தை எடுத்து கூறி இனிப்புகள் வழங்குவதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசு  திருக்குறளை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் என்றும், கோவை காந்தி பார்க், பகுதியில் அய்யன் திருவள்ளுவருக்கு ஒரு  சிலை அமைக்க வேண்டும் எனவும்,கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகங்கள், கல்வி உதவி நல திட்டங்கள் வழங்கப்பட உள்ளது எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கார்த்திகேயன், சிவக்குமார் செய்திருந்தனர். மேலும் நிர்வாகிகள் இளங்கோ, கிருஷ்ணகுமார், முத்தழகன், ப்ரஸ் முருகன், ப்ரஸ் ராஜன், ஜெயராஜ், தமிழரசு, ஸ்ரீராம், பாலன், வடிவேல், காமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares