குன்னூர்திமுக சார்பில்10-ஓவர்களுக்கான கிரிக்கெட் போட்டி
![]()
நீலகிரி மாவட்டம்
குன்னூர்திமுக சார்பில்10-ஓவர்களுக்கான கிரிக்கெட் போட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒன்றிய திமுக சார்பில் எடப்பள்ளியில் உள்ள மைதானத்தில் கடந்த சில நாட்களாக பொங்கல் விழாவினை முன்னிட்டு
10-ஓவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன.இந்த நிலையில் இன்று இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் குன்னூர் V1 பாய்ஸ் கக்காச்சி அணியும், எடப்பள்ளி லெவன்ஸ் அணியும்,மோதின இதில் எடப்பள்ளி லெவன்ஸ் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு
குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் மற்றும், பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன் ஆகியோர் கோப்பைகளும், மெடல்களையும், பரிசுகளாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

