டென்ட்ஹில் முனீஸ்வரர்கோவில்57வது பொங்கல்விழா

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட டென்ட் ஹில் முனீஸ்வரர் கோவிலின் 57வது பொங்கல் விழா மற்றும் தந்தி மாரியம்மன் திருவீதி உலாநடைபெற்றது.இந்த விழாவை முன்னிட்டு முனீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை நடந்தது.பின்னர் மகளிர் அணியினர் சீர் தட்டுகளுடன் தாரை, தப்பட்டை முழங்க  ஆடல், பாடலுடன் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மன் அலங்கார பூஜை நிறைவடைந்த உடன் அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு முனீஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் பைசன் திரைப்பட நடன குழுவினர் புலி வேடமணிந்து நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் கமிட்டி நிர்வாகிகள்  செய்திருந்தனர்.
0Shares