ஆட்சியர்ச.கந்தசாமிதலைமையில்10வதுபடைவீரர்நாள்
![]()
ஈரோடு மாவட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில்
10 -வது படைவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு,
போரில் ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் போரில் வீர மரணமடைந்த 7 படைவீரர்களின் குடும்பத்தாருக்கு ரூ.1,75,000/- மதிப்பில் வருடாந்திர பாரமரிப்பு மானியத்தினை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் (14.01.2026)அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முன்னாள் நலத்துறையின் சார்பில் 10- வது படைவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
நமது பாரத திருநாட்டில் முப்படைகளில் பணிபுரிந்து அல்லும் பகலும் அயராது உழைத்து தாய் நாட்டிற்காக தனது இன்னுயிரை நீத்த படைவீரர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற படைவீரர்கள் நினைவாக அவர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக படைவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி-14 ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் 10-வது படைவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
தொடர்ந்து, போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் வீர மரணம் அடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற படைவீரர்களுக்கு அவர்கள் செய்த தியாகத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இன்றைய தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் போரில் ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் போரில் வீர மரணமடைந்த 7 படைவீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.25,000/- வீதம் என மொத்தம் ரூ.1,75,000/- மதிப்பில் வருடாந்திர பாரமரிப்பு மானியத்தினையும், மற்றும் பாராட்டு கேடயங்களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் (மு.கூ.பொ.) திருமதி.புஷ்பலதா, லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) திரு.நாகராஜன், முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் திரு.சாமுவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

