ஒசட்டி பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
![]()
ஜெகதளா பேரூராட்சி
ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட 12-ம் வார்டு ஒசட்டி பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பிறகு சாக்கு போட்டி,ஸ்பூன்லிங்,உரியடி,போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மணிகண்டன், செயல் அலுவலர் ரமேஷ் குமார், பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி பங்கஜம், துணை தலைவர் ஜெய்சங்கர்,மன்ற உறுப்பினர்கள் சஞ்சீவ் குமார், மோசஸ், மரியராஜன், சுகுணம்பாள், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

