தமிழ்நாடு ஆரிய சமாஜத்தின் சார்பாக பொங்கல் திருநாள்

Loading

 

தமிழ்நாடு ஆரிய சமாஜத்தின் சார்பாக பொங்கல் திருநாள்

தமிழ்நாடு ஆரிய சமாஜத்தின் சார்பாக பொங்கல் திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆரிய சமாஜத்தின் தலைவர் , டி ஏ வி கல்வி குழுமத்தின் செயலாளர் திரு விகாஷ் ஆர்யா பொங்கல் பண்டிகையை தொடங்கி வைத்தார். ஆரிய சமாஜ் மந்திரியில் கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் பண்டிகையொட்டி கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டும் மஞ்சளால் சூழப்பட்டும் அனைவரையும் கவர வண்ணம் இருந்தது. இந்த பொங்கல் பண்டிகையின் நோக்கமே அதாவது இன்றைக்கு பெரும்பாலான இல்லங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் கேஸ் அடுப்பில் தான் பொங்கலைவைத்து வெளியில் சூரிய பகவானுக்கு படைக்கிறார்கள் ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் குறிப்பாக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு ஆரிய சமாஜம் டிஏவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புது பானையில் அரிசி இட்டு விறகு அடுப்பில் கிழக்கு திசை நோக்கி சூரிய பகவானுக்கு பொங்கல் படைக்கப்பட்டது. இதன் மூலம் நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக மாணவர்கள் அறிந்து கொள்வார்கள்

0Shares