தியாகி கொடிகாத்தகுமரன்94-ஆம்ஆண்டு நினைவுநாள்
![]()
ஈரோடு
ஞாயிற்றுக்கிழமை நம் நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த கொடிகாத்த தியாகி குமரன் அவர்களின் 94-ஆம் ஆண்டின் நினைவு நாளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எதிரில் உள்ள தியாகி குமரன் சாலையில் அமைந்துள்ள தியாகி குமரன் திருவுருவ சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் ஈரோடு மாவட்டத் தலைவருமான “சேவா ரத்னா” N.நந்தகோபால் B.Com., அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திரு.வைரம், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் திரு.பிரதாப், திரு.விக்ரம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் திரு.ஸ்ரீதர், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளர்கள் திரு.சக்திவேல், திரு.தனசேகர்,SIB நிர்வாகிகள் ஈரோடு காசிபாளையம் கிளை, P.மேட்டுபாளையம் கிளை, K.மேட்டுப்பாளையம் கிளை, கருங்கல்பாளையம் கிளை, சூரம்பட்டிவலசு கிளை, ஈரோடு மேற்கு கிளை, கோபி காசிபாளையம் கிளை, நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞரணியினர் மற்றும் நம் செங்குந்த சொந்தங்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு தியாகி குமரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி. முன்னதாக ஈரோட்டின் மண்ணின் மைந்தர் தியாகி குமரன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈரோடு இரயில் நிலையத்தை தியாகி குமரன் இரயில் நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது..

