சிறப்பு குழந்தைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும்
![]()
சிறப்பு குழந்தைகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் : நடிகர் சரத்குமார்
நாட்டில் உள்ள 140 கோடி மக்களில் 2.6 சதவீதம் மக்கள் சிறப்பு குழந்தைகளாக உள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்கள் தொகையில் மூன்று விழுக்காடு சிறப்பு குழந்தைகளாக இருக்கிறார்கள் என்றும் இவர்களுக்கு உதவ நம் அனைவரும் முன்வர வேண்டும் என்று திரைப்பட நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சரத்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்று சென்னை ஒய் எம் சி ஏ ராயப்பேட்டையில் Kind தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஆகியோருக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1500 ரூபாய் மதிப்பிலான அரிசி, வெள்ளம், பல்வேறு மளிகை சாமான்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கிப் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் சிறப்பு குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்றும் அந்த குழந்தைகளுக்கு வசதி படைத்தவர்கள் மட்டுமல்லாமல் நாம் அனைவருமே உதவ வேண்டும் என்ற அவர் தாயுள்ளத்தோடு அவர்களை நாம் கவனித்தால் அது இறைவனுக்கு செய்யும் ஒரு சிறந்த தொண்டாகும் என்றும் இதனை ஆற்ற நாம் அனைவரும் ஜாதி மத இன வேறுபாடு களை கலைந்து பனியாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய kind நிறுவனத்தின் தலைவர் திரு. விமல்சந்த தாரிவால், இன்று நடைபெற்ற விழாவில் ஏறக்குறைய 50 லட்சம் ரூபாய் பெரு மான பொங்கல் சிறப்பு பையை ஏறக்குறைய 2062 பேருக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார். 1500 ரூபாய் மதிப்புள்ள இந்த பையை சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் சிறப்பாக பொங்கலை கொண்டாட தமது தொண்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.
Kind தொண்டு நிறுவனத்தின் மூலம் தேசிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் ,ரக்ஷா பந்தன், சுதந்திர தினம் முதலிய விழாக்களை சிறப்பு குழந்தைகள் மத்தியில் கொண்டாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் சிறப்பு குழந்தைகள் மத்தியில் தன்னம்பிக்கையை உருவாக்கி அவர்கள் தனிமையில் இல்லை அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக என்றென்றும் நிற்கிறோம் என்ற மகிழ்ச்சியான அனுபவத்தை உணர்த்தவோ இது போன்ற பண்டிகைகள் சிறப்பு குழந்தைகள் மத்தியில் கொண்டாடி வருவதாகவும் அவர் கூறினார் . கை தொட்ட நிறுவனத்தின் செயலாளர் ரஞ்சித் ஒபெனா பொருளாளர் ராஜேஷ் லோடா துணைத் தலைவர் கே வி சுந்தரம்,அகில இந்திய ஜெயின் சங்க முன்னாள் தலைவர்,புது டெல்லி நேமி சந்த் சோப்டா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு பரபாகர்,திரு.எ க்ஸே வியர், சமூக ஆர்வலர்திரு C.N. ரமேஷ், வருமான வரித்துறை முன்னாள் ஆணையர் ராஜிப் ஹோட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

