ஆங்கில புத்தாண்டுஇளைஞர்கள் குத்தாட்டம்
![]()
திருவள்ளூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் குத்தாட்டம் ஆடி உற்சாக வரவேற்பு : கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை :
திருவள்ளூர் ஜன 01 : விடியும் ஆண்டு வெறும் தேதியல்ல… உங்கள் வெற்றியின் தொடக்கமாகவும்,இருள் விலகட்டும், தடைகள் தகரட்டும்: உங்கள் கனவுகள் ஒவ்வொன்றும் நனவாகட்டும் என்ற சந்தோஷம் முழக்கத்தோடு எட்டாத உயரத்தைத் தொட, இந்த ஆங்கில புத்தாண்டு உங்களுக்கு ஏணியாக அமையட்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இளைஞர்கள் நள்ளிரவு 12:01 மணிக்கு உற்சாகமாக குத்தாட்டம் ஆடி புதிய ஆண்டை வரவேற்றனர். கள்ளம் கபடமில்லாத சிரிப்புடன் புதிய உத்வேகத்தை வரவேற்கும் விதமாக நடனமாடி புதிய ஆண்டை இளைஞர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.
அதே போல் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் தரிசனம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளின் அருளை பெற்றனர். பூங்கா நகரில் உள்ள ஜலநாராயண பெருமாள் கோவிலில் ஜலநாராயண பெருமாள் ஏலக்காய் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதே போல் திருவள்ளூர் அருகே 100 ஆண்டுகள் பழமையான கௌடி தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி 100 ஆண்டுகள் பழமையான திருவள்ளூர் சி.எஸ்.ஐ கௌடி தேவாலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக தேவாலயத்தில் ஆயர்கள் புதிய ஆண்டில் இறை ஆசீர்வாதத்துடன் வாழ கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றபடி மக்களுக்கு நற்கருணை ஆசீர் வழங்கி சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றி ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.இதேபோல் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றன.

