ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
![]()
சேலம்
சேலம் டவுன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், அதிகாலை 5 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் வழியாக எம்பெருமான் லக்ஷ்மி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ்பாபு கூறும்போது, இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள், மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்றும், இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அள்ளித்தரும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் சார்பில் அனைவருக்கும், வைகுண்ட ஏகாதேசி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சேலம் ஆன்மீக அன்பர்கள் குழு தலைவர் பிரபாகரன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் சாவித்திரி, ஈசன், சிட்டிபாபு, ஐயப்பன், செயல் அலுவலர் அனிதா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டு எம்பெருமான் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாளை தரிசித்து அருள் பெற்றனர்.

