அரசு போக்குவரத்து அலுவலகத்தில் மருத்துவ முகாம்

Loading

கூடலூர்
கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு, ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு
ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.
போக்குவரத்து கழக போர்மன் கிருஷ்ணமூர்த்தி,
போக்குவரத்து கழக தொழிற்சங்க செயலாளர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் நவாஸ் தலைமையில் மருந்தாளுனர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக அலுவலர் லாய்ஷான் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் போக்குவரத்து கழக வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.
போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares