பள்ளி சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்
![]()
ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் : திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு :
திருவள்ளூர் டிச 26 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி கடந்த ஜூலை 12ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி குற்றவாளி படத்தை தயார் செய்து பொதுமக்கள் மத்தியில் பரவச் செய்ததன் அடிப்படையில் குற்றவாளியான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கலே பிஸ்வகர்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தொடர் விசாரணையில் இவனது தாய் தந்தை நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்றும் அசாமில் குடி பெயர்ந்ததும் தெரியவந்தது. இவனுடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் ஒரு அக்கா. என இவனுடன் சேர்த்து மொத்தம் 4 பேர் இருப்பதும், 19 வயதில் தாய் தந்தை இறந்து விடவே ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே உள்ள பஞ்சாபி தாபாவில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. இங்கு வேலை செய்யும் போது, சனி ஞாயிறு கிழமைகளில் காலை புறப்பட்டு இரவு வரை ஊரை சுற்றி விட்டு மீண்டும் செல்வதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அசாமில் ஒரு பெண்ணை திருமணம் செய்து 18 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தி விட்டு வந்ததும் அதன் பிறகு 40 வயதில் உள்ள ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி ஆரம்பாக்கத்தில் ரயிலில் இருந்து இறங்கி வரும்போது மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும், ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும், தொடர்ந்து 12:55 மணி அளவில் அவ்வழியாக வந்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியானது.இதனையடு த்து கடந்த ஜூலை 24-ஆம் தேதி சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி சென்ற சிசிடிவி காட்சி அடிப்படையில் தனிப்படை போலீசார் 25-ஆம் தேதி காத்திருந்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட விசாரணை முழுவதும் சாக்சா செயலி மூலம் வீடியோவாக பாதிக்கப்பட்டவர், சாட்சி விசாரணை பதிவு செய்தனர்.
இருப்பதாகவும் விரைவில் இது குறித்து விவரம் தெரிவிக்கப்படும் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 4 நாட்கள் விசாரணைக்குப் பின் இன்று மீண்டும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது காவல் துறையினர் தாக்கினார்களா எனறும் உணவு வழங்கப்பட்டதா என்றும் கேட்ட நீதிபதி மீண்டும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம், சாட்சியங்களின் ஆதாரங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்தனர். வழக்கில் அரசு தரப்பில் விஜயலட்சுமி மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். வழக்கை நீதிபதி உமா மகேஸ்வரி விசாரணை செய்தார்.
சாட்சியங்கள் அடிப்படையில் நீதிபதி உமா மகேஸ்வரி இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், (சாகும் வரை சிறை தண்டனை) ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உமா மகேஸ்வரி பரிந்துரை செய்தார். 30 சாட்சியங்கள், 39 ஆவணங்கள் சமர்ப்பித்தும்.,14 சான்று பொருட்களை ஓப்படைத்திருப்பதாகவும் இதன் அடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு நீதிபதி பாராட்டும் தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரி தெரிவித்தார்.
அதே நேரத்தில் காவல்துறை சார்பில் சாக்சா என்ற செயலி மூலம் பாதிக்கப்பட்டசிறுமியின் வாக்கு மூலம், சாட்சிகளின் ஆதாரங்களை வீடியோவாக எடுத்து அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருப்பதால் வழக்கு விசாரணை விரைவில் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் இது போன்ற பாலியல் குற்றங்கள் நிகழக் கூடாது என்ற அடிப்படையில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் எஸ் பி. விவேகானந்தா சுக்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

