நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி

Loading

நீலகிரி மாவட்டம்

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உறைபனியின் தாக்கம்  துவங்கி உள்ளதால் புல்தரைகள் மற்றும் வாகனங்கள் பனிகட்டியாக மாறி உள்ளது.ஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் பனி பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் இந்த ஆண்டு பனி பொழிவு குன்னூர்-உதகை மற்றும்  சுற்றுபுற பகுதிகளில் பனியின் தாக்கம் கடந்த ஒரு வார காலமாக நீடித்து வருகிறது இந்த நிலையில் குன்னூர் சுற்றுவட்டாாார பகுதிகளிலும் இன்று பனியின் தாக்கம் அதிகமாகவே காணபட்டது.குறிப்பாக ராணுவ பகுதியில் உள்ள கார்வ் புல் மைதானத்தில் வெள்ளை கம்பளம் வரித்தார் போல் பனிபடர்ந்து காணபட்டது கால்ப் விளையாட யாரும் வரவில்லை.இருந்த போதிலும் மைதானம் செடி கொடிகள் மற்றும் வாகனங்கள் முழுவதும் பனிகட்டியாக மாறியது இதனால் உள்ளூர் வாசிகளும் சுற்றுலா பயணிகளும் செல்பி எடுக்க இங்கு குவிந்து வருகின்றனர். இந்த கடும் குளிரால் பகல் நேரங்களிலேயே தீ மூட்டி குளிர்காயும் நிலை ஏற்பட்டுள்ளது.

0Shares