சிறப்பு பார்வையாளர் ராமன் குமார் நேரில் ஆய்வு

Loading

திருவள்ளூரில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக உதவி மையங்கள் : வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ராமன் குமார் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் டிச 23 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான ராமன் குமார் தலைமையிலும், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் முன்னிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026  தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளர் தலைமையில் மாவட்ட தேர்தல்  அலுவலர் முன்னிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக 10 சட்டமன்ற தொகுதிகளின்  வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததில் விடுபட்ட பெயர்களை சேர்த்தல்  மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நடைபெறும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள  அறிவுறுத்தினார்.
மேலும், திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுப்பம் டி.இ.எல்.சி நடுநிலைப்பள்ளியிலும்,பூவிருந்தவல்லி வட்டம், பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள நடைபெற்ற சிறப்பு உதவி மையத்தினை ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விபரங்களை கேட்டறிந்து அவர்களுடன் குழு புகைப்படங்களை எடுத்து கொண்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், பொன்னேரி சார்  ஆட்சியர் ரவிகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் வை.ஜெயகுமார், மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், உதவி ஆணையர் கலால்/வாக்காளர் பதிவு அலுவலர் கணேசன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், 9 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares