நீலகிரிஅனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளி தினவிழா

Loading

நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம், ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி கலையரங்கத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் 
ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், 181 பயனாளிகளுக்கு ரூ.82.25 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.
இவ்விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், 65 பயனாளிகளுக்கு ரூ.62 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 9 பயனாளிகளுக்கு ரூ.1.30 இலட்சம் மதிப்பில் திறன்பேசிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ.1.26 இலட்சம் மதிப்பில் சக்கர நாற்காலிகளையும் (பொது), 17 பயனாளிகளுக்கு ரூ.1.08 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும், 8 பயனாளிகளுக்கு ரூ.76,000/- மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி (பொது), 5 பயனாளிகளுக்கு ரூ.1,250 மதிப்பில் எல்போ ஊன்று கோல்களையும், 19 பயனாளிகளுக்கு ரூ.62,415 மதிப்பில் காதொலி கருவிகளையும் (பொது), 9 பயனாளிகளுக்கு ரூ.85,500/- மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளையும் (SSA), 2 பயனாளிகளுக்கு ரூ.31,500/-மதிப்பில் சக்கர நாற்காலி (SSA), 2 பயனாளிகளுக்கு ரூ.6,570/- மதிப்பில் காதொலி கருவிகளையும் (SSA), 4 பயனாளிகளுக்கு ரூ.14,500/- மதிப்பில் மாற்றுத்திறனாளி நல வாரியத்திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகைகளையும், ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 12 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரூ.7,750/-பரிசுத்தொகையினையும், 13 பயனாளிகளுக்கு ரூ.13.66 இலட்சம் மதிப்பில் செயற்கை அவையங்களையும், 8 பயனாளிகளுக்கு ரூ3,250/-மதிப்பில் கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சிகளையும் என மொத்தம் 181 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.82.25 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:
வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுதிறனாளிகள் தினமாக கொண்டாடி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 07.05.2021 முதல் 20.12.2025 முடிய மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அதனடிப்படையில் 2,893 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.27.23 கோடியும், 993 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பேட்ரி வீல் சேர்கள், தையல் இயந்திரங்கள், திறன்பேசிகள், சக்கர நாற்காலிகள் போன்ற உதவி உபகரணங்களும், 514 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.29.40 இலட்சமும், 60 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சுய தொழில் புரிய வங்கி கடன் மானியம் ரூ.11.94 இலட்சமும், 0 முதல் 6 வயது வரை உள்ள 26 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ரூ.25.74 இலட்சம் செலவில் ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பராமரிப்பு பணிகளும், 0 முதல் 6 வயது வரை உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு ரூ.20.32 இலட்சம் செலவில் ஆரம்ப கால பயிற்சி மையத்தில் 19 குழந்தைகள் சேர்ந்து பயனடைந்துள்ளனர். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தி கொண்டு வருகிறது. இதனை நீங்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், துணைத்தலைவர் ரவிக்குமார், ஜே.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரி முதல்வர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares