தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு
![]()
சேலம்
அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை மற்றும் ஜென்னிஸ் எஜுகேஷனல் சாரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழா சூசன் அம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேசிய சர்வதேச அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு புத்தாடை மற்றும் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. சுமார் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மத்திய உணவு கொடுக்கப்படடது மற்றும் ஆர் பி சித்தா ஆயுர்வேதத்தில் மருத்துவமனை சார்பாக முகம் நடைபெற்றது . ஆதி கண் மருத்துவமனை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாநிலத் தலைவர் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி உறுப்பினர் தங்கம் , சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி , மாநகர காவல் துணை ஆணையாளர் சேலம் வடக்கு சிவராமன், கோயமுத்தூர் டேனியல் ஜவஹர் , ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஜென்னிஸ் கல்வி சாரி டபுள் டிரஸ்ட் தலைவர் கர்லின் எபி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் ஜாகிர் உசேன், ஐடியல் பவுண்டேஷன் பெங்களூர் சைனீ கிரேஷ், சந்திரசேகன், சரவணகுமார், ஷர்மிளா சரவணன், ராஜ்குமார், ஜஸ்டின் ராஜ், கீர்த்தி ஜெயகாந்த், காயத்திரி, காமராஜ் பிள்ளை, அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .மேலும் பீட்டர் சிவகுமார், ராஜகோபால், லியோ பிரபு ,ஜோசப் கிஷான், ரூபா, ராஜேந்திரன், ஷீருண், வெற்றிவேல் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் . இவ்விழாவின் ஏற்பாடுகளை விஜயகுமார், சின்ராஜ் சூர்யா, ஷாம் சுந்தர் ,ரவி தங்கதுரை, ஷாம் எபினேசர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் . விழாவின் இறுதியில் ஷாம் எபினேசர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

