எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம் மாரத்தான் போட்டி

Loading

கோயம்புத்தூர்
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் தனது 13 ஆண்டுகால  நலன் மற்றும் சமூக பங்களிப்பை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு நடைபெறும் மாரத்தான் போட்டியில் 1725 பணியாளர்களை களமிறங்க வைத்துள்ளது 
உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட்  நிறுவனம், கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியின், 13 ஆண்டுகால உறவை பெருமையுடன் கொண்டாடி வருகிறது. கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ‘பவர்டு பை’ எனும் பெரும் நிதி ஆதரவு வழங்கும் ‘ஸ்பான்சராக இந்த நிறுவனம் இருந்து வருகிறது. மேலும் இம்முறை இந்த நிகழ்வில் பங்கேற்கும் 25,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களில் 1,725-க்கும் மேற்பட்டவர்கள் எல்ஜி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என பெருமையுடன் தெரிவித்துள்ளது. மேலும் எல்ஜி நிறுவன ஊழியர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற ப்ரத்யேக ஆடை வெளியீட்டு விழாவையும் கோவை கொடிசியா வளாகத்தில் நடத்தியது..
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ்  கூறியதாவது..
கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாரத்தான், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, இந்த மாரத்தான் பொட்டி கோவையின் அடையாள நிகழ்வாக வளர்ந்து, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கும் நிதி, புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் பரிசோதனை முகாம்கள், ஆலோசனை மற்றும் தொடர் பராமரிப்பு, நோய்த்தணிப்பு சேவைகள், சிகிச்சை ஆதரவு மற்றும் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, நோய் கண்டறிதல், மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கான நிதி உதவி போன்ற தனது திட்டங்களை விரிவுபடுத்த கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷனக்கு உதவியுள்ளது என தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது  கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வின் ரேஸ் இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0Shares