ஈரோடு கிழக்கில்சி.எஸ்.சிவகுமார்விருப்பமனுத்தாக்கல்

Loading

ஈரோடு
2026 சட்டமன்றத் தேர்தல்: ஈரோடு கிழக்கில் போட்டியிட பெஸ்ட் சி.எஸ்.சிவகுமார் விருப்ப மனுத் தாக்கல்
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாநகர மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளராகப் பணியாற்றி வரும் பெஸ்ட் சி.எஸ்.சிவகுமார், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகளைச் சந்தித்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது மனுவை அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் இளைஞர் அணி நிர்வாகி ஒருவர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளது, அப்பகுதி அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தேர்தல்களில் இந்தத் தொகுதி மிகுந்த கவனத்தைப் பெற்ற நிலையில், தற்போது தேர்தல் பணிகளுக்கான ஆயத்தங்களை அதிமுக நிர்வாகிகள் வேகப்படுத்தியுள்ளனர்.
0Shares