சீட்டுபணம்கொடுக்காமல் காணாமல்போனபழனிசாமி

Loading

சேலம்
முருகன், நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரம், சேலம். ஆகிய நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். நான் இந்த புகார் மனுவை தனக்காகவும், மேற்படி ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் மகன் சீனிவாசன், லேட்.அலெக்ஸ் மகன் பிரான்சிஸ், மாதையன் மகன் சுரேஷ், காளியப்பன் மகன் வெங்கடேஷ், சுப்ரமணியம் மகன் S.M.செந்தில், சின்னாகவுண்டர் மகன் கோவிந்தன், முத்துவேல் மகன் குப்புசாமி. ராமசாமி மகன் சந்திரசேகர் ஆகியோர்களுக்காகவும் சேர்த்து தாக்கல் செய்கிறேன். நாங்கள் மேற்படி ஊரைச்சேர்ந்த தாண்டவக்கவுண்டர் பழனிச்சாமி மற்றும் ரமணி மகேந்திரன் ஆகியோர்களிடம் மாதாந்திர ஏலச்சீட்டு போட்டுவந்தோம். அவர்களிடம் எங்களைப்போல 200க்கும் மேற்பட்டோர்கள் சீட்டு போட்டு வந்தார்கள். மேற்படி நபர்கள் மேற்படி மாதாந்திர சீட்டுகள் நடத்தும் ஏஜெண்டுகள் ஆவார்கள். அவர்கள் ரூபாய் ஒருலட்சம் சீட்டு முதல் 10லட்சம் சீட்டு வரை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் எனக்கு மேற்படி சீட்டு ஏஜெண்டுகளிடமிருந்து ரூபாய் வேண்டியுள்ளது. அதேபோல் இந்த புகார் மனுவில் கண்டுள்ள மேற்படி நபர்களுக்கும் சீட்டு தொகைகள் வர வேண்டியுள்ளது. இந்நிலையில் மேற்படி சீட்டு ஏஜெண்டுகளில் ஒருவரான பழனிசாமிஊரைவிட்டே வெளியேறிவிட்டார். மேற்படி நபர்களிடமிருந்து எங்களுக்கு மொத்தம் ரூ. 50லட்சம் வரவேண்டியுள்ளது.
அதேபோல் ஊரில் மற்ற நபர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டியது சுமார் 15கோடி ரூபாய் இருக்கும். நாங்கள் கடந்த 12.12.2025ம் தேதி காலை சுமார் 11மணிக்கு மேற்படி மகேந்திரன் என்பவரை நேரில் அணுகி மேற்படி சீட்டுத்தொகைகளை கேட்டதற்கு அவர், எனது பங்குதாரர் பழனிசாமி என்பவர் ஊரைவிட்டு ஓடிவிட்டார். அதனால் நான்மட்டுமே உங்களுக்கு சீட்டுத் தொகைகளை கொடுக்க முடியாது. நீங்க பணம் கேட்டு அடிக்கடி வந்தால் நான் உங்களை சும்மா விடமாட்டேன் என்றும், நான் யார் தெரியுமா என்றும் கூறி எங்களை மிரட்டினார். ஆக மேற்படி பழனிசாமி மற்றும் மகேந்திரன் ஆகியோர்கள் எங்களுக்கு சீட்டுத்தொகைகளை ஏமாற்றியுள்ளார்கள். திருப்பித்தராமல் திட்டமிட்டு எங்களை ஏமாற்றியுள்ளார்கள்.
ஆகவே காவல் உதவி ஆணையர் அவர்கள் தயவு செய்து மேற்படி நபர்களை அழைத்து விசாரணை செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மிகுந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்என்று மனுவில் தெரிவித்து இருந்தார்
0Shares