குழந்தைகள் பாதுகாப்பு & உரிமைகள் ஆய்வுக் கூட்டம்

Loading

 

இராணிப்பேட்டை மாவட்டம்

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள்  பாதுகாப்பு ஆணையத் தலைவர் திருமதி. புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள்  பாதுகாப்பு ஆணையத் தலைவர் திருமதி. புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  இன்று (15.12.2025) குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில்  மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் கட்டாய கல்வி சட்டம் மூலம் இட ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் குழந்தைகள் எண்ணிக்கை மற்றும் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்கள்.

சமூக நலத்துறையின் மூலம் குழந்தை திருமணம் தொடர்பாக வரப்பட்ட புகார்கள் மற்றும் தடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குழந்தை திருமணம் தவிர்க்கப்பட்ட குழந்தைகள் தற்போது பள்ளியில் பயின்று வருபவர்கள் குறித்தும், அரசு பள்ளி விடுதிகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் தங்குவதற்கான பதிவு பெற்ற விடுதிகள் பதிவு பெறாத விடுதிகள் குறித்தும், விடுதிகளில் மாணவ மாணவிகளின் கண்காணிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையில் குறித்தும், குழந்தைகள் தங்களுக்குள்ள பிரச்சனைகளை தெரிவித்த விவரங்கள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

காவல்துறை மூலம் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்,  நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்தும், குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆய்வுகளில் மீட்க குழந்தைகள் குறித்தும் , சுகாதார துறையின் மூலம் 18 வயதிற்குட்பட்ட இளம் வயது கர்ப்பம் தொடர்பான நிலை அறிக்கை குறித்தும், குழந்தைகளின் ஊட்டச்சத்து போன்ற பணிகள் விவரங்களை கேட்டறிந்து குழந்தை திருமணம் மற்றும் கர்ப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுகளையும் ஆய்வு செய்தார்கள்.

குழந்தை நல குழு செயல்பாடுகளையும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகளையும் விரிவாக ஆய்வு செய்தார்கள். கிராம வட்டார நகராட்சி பேரூராட்சி மாவட்ட அளவிலான குழந்தைகள் நலக்குழு குழந்தை திருமணம் போக்சோ குழந்தை தொழிலாளர் இளம் வயது கர்ப்பம் அதிகளவில் நடைபெறும் இடங்கள் கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட விவரங்களையும் கொரோனா  காலங்களில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கும் பணிகளையும், குழந்தை இல்லங்களில் தங்கி உள்ள குழந்தைகளின் நிலைகள் குறித்த அறிக்கையும், பாலியல் குற்றத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள விவரங்களையும் குழந்தைகள் பராமரிப்பு இல்லம் பதிவு செய்யப்பட்டு மற்றும் அங்கீகரிக்கப்படாத இல்லங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விரிவாக ஆய்வு செய்தார்கள். 1098 குழந்தைகள் அரசு உதவி எண்ணில் பெறப்பட்ட புகார் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் குறித்தும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நீதி குழுமம் செயல்பாடுகள் ஆகியவற்றினை விரிவாக ஆய்வு செய்தார்கள்.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள்  பாதுகாப்பு ஆணையத் தலைவர் திருமதி. புதுக்கோட்டை விஜயா அவர்கள் தெரிவித்ததாவது:-

இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, மருத்துவத் துறை, குழந்தைகள் நலக் குழுமம், இளைஞர் நல குழுமம் இபோன்ற ஒருங்கிணைந்த துறைகளின் கையில் தான் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள  குழந்தைகளின் பாதுகாப்பு உரிமைகளும் உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.  குழந்தைகளின் கல்வி எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் சிந்தித்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் கல்விக்கான திட்டங்களான இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், கல்லூரிக் கனவு, சமீபத்தில் செயல்படுத்திய அன்புக் கரங்கள் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இல்லாத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் குழந்தைகள் எவ்வாறு கண்காணிக்கப்பட வேண்டும்? அவர்கள் ஒழுங்காக இருக்கின்றார்கள? சரியாக தண்ணீர் அருந்துகின்றார்களா? கழிவறை முறையாக செல்கின்றார்களா? இதுபோன்றவை குறித்து வல்லுநர்களை கொண்டு சிந்தித்து  பள்ளிகளில் Water bell அடிக்கின்றோம். வகுப்பறைக்கு செல்லும் குழந்தைகள் இச்சமயத்திலாவது தண்ணீர் அருந்த வேண்டுமென்பதற்காகவும், கழிவறை செல்வதற்காகவும் .

RTE கட்டாய கல்வி இட ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் குழந்தையிடம் கூட  பள்ளி நிர்வாகம் முழு கட்டணம்  வசூலிக்கின்றது. கேட்டாள் திரும்ப செலுத்துவோம் என்கிறார்கள். ஆனால் திரும்ப செலுத்தவில்லை இதுபோன்ற புகார்கள் நிறைய குழந்தைகள் ஆணையத்திற்கு வருகிறது.        இராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் இடைநிற்றல் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கான குழந்தைகள் ஆணையத்தின் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேசமயம் அரசாங்கம் கொடுக்கின்ற RTE கட்டாய கல்வி  இட ஒதுக்கீட்டில் 14 இலவச கல்வி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இச்சீட்டினை பெறுவதற்கு குழந்தைகள் தயாராக இல்லையா? அல்லது பெற்றோர்கள் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளார்களா?  என்பதை ஆராய வேண்டும்.  குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்  குறித்து அரக்கோணம், நெமிலி, திமிரி, சோளிங்கர், வாலாஜா  இதுபோன்ற வட்டாரங்களில் வருகின்ற காலங்களில் அதிகளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி குழந்தைகளின் உரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யும் வகையில்  நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும்.

சமூக நலத்துறையாக இருந்தாலும் சரி, குழந்தை தொழிலாளர் நல துறையாக இருந்தாலும் சரி  ஆய்வு செய்ததில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்பதை பார்க்கும் பொழுது குழந்தைகள் ஆணையம் மகிழ்ச்சியடைகிறது. உங்களின் பணிகள் தொடரட்டும்.

கடந்த 5 மாதங்களாகத் தான் குழந்தைகள் ஆணையம் செயல்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த குறுகிய காலத்திலேயே 33 மாவட்டங்களுக்கு சென்று குழந்தைகள் தொடர்பான அனைத்து துறைகளிடம்  குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடி உள்ளோம் என தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள்  பாதுகாப்பு ஆணைய  உறுப்பினர்கள் முனைவர்.கசிமிர் ராஜ், மரு.மோனா மட்டில்டா பாஸ்கர்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் திருமதி.ரஞ்சித பிரியா, துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கட கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்

0Shares