கோவையில் 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி

Loading

கோவை
கோவையில் 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி அளித்து வருவதுடன், தான், மட்டுமின்றி தனது மாணவர்கள் வரைந்த ஓவியங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சி படுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒவிய ஆசிரியர்.. 
கோவையை சேர்ந்தவர் அஜிதா ஜவேரி. ஒவிரான இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி மையத்தையும் நடத்தி வருகின்றார். ஆர்டிஸ்ட்டு ஆர்ட் க்ளாஸ் எனும் தலைப்பில் இதனை நடத்தி வரும் இவர், தான் வடிவமைக்கும் புதிய புதிய கை வண்ணங்களை ஆண்டு தோறும் ஒரு ஓவிய கண்காட்சியாக நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சியை கடந்த 13ம் தேதி மற்றும் 14ம் தேதி என இரு நாட்கள், கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், நடத்தி உள்ளார். காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த ஓவிய கண்காட்சியில் இவர் வரைந்த ஓவியங்கள் மட்டுமில்லாமல் தனது மாணவர்களின் படைப்புகளையம் கண்காட்சியில் இடம் பெற செய்து, சுமார் 700க்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிபடுத்தி உள்ளார். ஒவிய ரசிகர்கள் இவரது ஓவியங்களை கண்டு ரசிப்பதுடன் வாழ்த்துக்களும் கூறி வரும் நிலையில், இக்கண்காட்சி கூறித்து ஓவியர் அஜிதா ஜவேரி செய்தியாளர்களிடம் கூறியதாவது…
தான் கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சிகளை வழங்கி வருகின்றதாகவும், தான் வரையும் ஓவியங்களை பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என அதனை கண்காட்சியாகவும் நடத்தி வருகின்றதாக கூறினார். தனது மாணவ மாணவியர்கள், அதிக அளவில் கலர் பென்சில், ஆயில் பெயிண்டிங், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். இதில் 4 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் ஆர்வமுடன் ஓவிய கலைகளை நன்கு கற்று வருகின்றதாகவும் கூறினார். தற்போது தான் வரைந்த  ஓவியங்கள் மட்டுமின்றி தனது மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் என 700த்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை இக்கண்காட்சியில்  காட்சி படுத்தி உள்ளதாகவும், அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares