முடிக்கப்பட்ட பணிகளை திறந்துவைத்தார் லட்சுமி
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சி அப்புக்கோடு பகுதியில், ரூ.34.80 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்து. ரூ.1.68 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உதகை ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் கட்டும் பணியினையும், சுரேந்தர் நகர் பகுதியில் 2025-2026 கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.5 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 1 வீட்டினையும், 2025-2026 நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பில் இத்தலார் சமுதாய கூடம் அருகில் கட்டப்பட்டு வரும் மேற்கூரையினையும், முள்ளிக்கூர் ஊராட்சி எமரால்டு பஜாரில், 2025-2026 உதகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டடத்துடன் கூடிய தடுப்புச் சுவர் கட்டும் பணியினையும் என மொத்தம் ரூ.1.68 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உதகை ஊராட்சி ஒன்றியம் இத்தலார் ஊராட்சி அப்புக்கோடு பகுதியில், பொது நூலகங்கள் கட்டுவதற்கான சிறப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் புதிய ஊர்ப்புற நூலகம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் இத்தலார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ரூ.12.80 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சிறிய சமுதாய சுகாதார வளாகத்தினை திறந்து வைத்தார்.
இவ்ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷாகௌர் மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

