கூடலூர் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
![]()
கூடலூர் அருகே பெரிய சூண்டி அரசு உயர்நிலை பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
பள்ளி ஆசிரியர் ஞானபாபியா தலைமை தாங்கினார்
ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் சதீஷ் பள்ளி ஆசிரியர்கள் பத்மாவதி, ராமலக்ஷ்மி, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் பேசும்போது காசநோய் 1882இல் கண்டறியப்பட்டது. உலக அளவில் பரவிய இந்த நோய் தற்போது பல்வேறு நாடுகளில் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்தியாவில் சில பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. காசநோய் டிரிபோகுலாசிஸ் என்கிற வைரஸ் மூலம் பரவுகிறது. காசநோய் உள்ள ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் அவர் உடலில் இருந்து வெளிவந்து காற்றில் கரைந்து அதை சுவசிக்கும் இன்னொருவருக்கு எளிதில் பரவுகிறது. காசநோய் வந்தால் தொடர் சளி, இருமல், இரவு நேர காய்ச்சல், உடல் எடை குறைதல் போன்றவை ஏற்படும். சளி பரிசோதனை மூலம் காசநோய் தாக்கம் குறித்து அறிந்துகொள்ள முடியும்.காசநோய் தாக்கம் இருக்கும் பட்சத்தில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சிகிச்சை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் முற்றிலும் குணமாகலாம். சிகிச்சையின் போது மது, புகையிலை பயன்படுத்த கூடாது என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது காசநோய் பரவ ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணம். தரமான உணவுகள் எடுத்துக்கொள்வது மூலம் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் இதன்மூலம் நோயெதிர்ப்பு சக்தி பெறமுடியும். நொருக்குதீனிகளை தவிர்த்துவிட்டு பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள், சிறுதானிய உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.உடற்பயிற்சி யோகா உள்ளிட்ட மூச்சுப்பயிற்சி போன்றவை உடலையும் மனதையும் வலுப்படுத்தும் என்றார்
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

