அம்பேத்கார் நினைவு நாள் பல்வேறு நலத்திட்ட உதவி

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம். குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில், அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு  அவர்கள் முன்னிலையில், 6,895 பயனாளிகளுக்கு ரூ.7.27 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில்
1 பயனாளிக்கு ரூ.7,240/- மதிப்பீட்டில் சலவைப்பெட்டியினையும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 பயனாளிக்கு வன உரிமைப்பட்டா தனிநபர் உரிமைபட்டாக்களையும், தாட்கோ மூலம் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் நினைவு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.216 கோடி மதிப்பிலும், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும், 36 தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளையும், நன்னிலம் மகளிர் நில உடமைத்திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 19 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 182 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பில் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவிகளும், 6,000 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழுக்களுக்கான அடையாள அட்டைகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதியுதவிகளும்,
112 பயனாளிகளுக்கு வறுமை குறைப்பு நிதியுதவிகளும், 20 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் வாசனை திரவிய பண்ணை தொகுப்பு நிதியுதவிகளும், 11 பயனாளிகளுக்கு ரூ.77,000/- மதிப்பில் வாழ்ந்து காட்டுவோம், நுண்தொழில் நிறுவன நிதியுதவிகளும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.10.40 இலட்சம் மதிப்பில் விவசாய கடன் அட்டைகளும், 30 பயனாளிகளுக்கு ஆட்டுக்கொட்டகை அமைக்க ரூ.1.15 கோடி மதிப்பில் நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கூட்டுறவுத்துறையின் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் சிறப்பான திட்டம் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் ஆகும். அதேபோல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாபெரும் வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயிலும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதந்தோறும் தலா ரூ.1,000/- நிதியுதவி போன்ற திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்துறை
நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து நமது மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 6,895 பயனாளிகளுக்கு ரூ.7.27 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டஅதனடிப்படையில், இன்றைய தினம் அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்துறை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து நமது மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 6,895 பயனாளிகளுக்கு ரூ.7.27 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமைக்கொறடா அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ச. அபிலாஷா கௌர், ., மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மரு.ஜெயராமன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.பாலகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷபிலாமேரி, குன்னூர் நகராட்சி ஆணையாளர் .இளம்பருதி, மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீணாதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .குப்புராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், தாட்கோ மேலாளர் செல்வி ஆர்னிபேர்ள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மணிகண்டன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி திலகவதி, குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், குன்னூர் நகர்மன்ற தலைவர்  சுசீலா, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி (ஓவேலி), சந்திரலேகா (பிக்கட்டி), திருமதி ராதா (உலிக்கல்), செல்வ வள்ளி (தேவர்சோலை), கலியமூர்த்தி (நடுவட்டம்), சத்தியவாணி (கீழ்க்குந்தா),  கௌரி (சோலூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares