மீஞ்சூர்நரிக்குறவர்மக்களுக்கு நிவாரணம்

Loading

புழல் மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டு, நரிக்குறவர் சமூக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் :
திருவள்ளூர் டிச 05 : திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தகரியம் பட்டு குமரன் நகர் பகுதியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், அரியன்வாயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் சா.மு.நாசர் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 17 குடும்பங்களை சேர்ந்த 58 நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். கூடுதலாக முகாம்களுக்கு வெளியே உள்ள 250 நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு பொட்டலங்களும், 3 வேளைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், அரியன்வாயில் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் மாற்று இடம் வழங்குவதற்கு ஆய்வு மேற்கொள்வது தொடர்பாகவும்  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அத்திப்பட்டு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை இரட்சத இயந்திரங்களின் மூலம் வெளியேற்றப்படும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜவேல், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் டி.மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சி துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares