உலக எய்ட்ஸ்தினத்தைமுன்னிட்டு2.24 லட்சம்நலதிட்டம்

Loading

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுப்பாடு அலகு சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ரூ.2.24 லட்சம் மதிப்பிலான  நல  திட்டங்களை வழங்கினார்:
திருவள்ளூர் டிச 02 :  திருவள்ளூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுப்பாடு அலகு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் எச்.ஐ.வி.எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து, எச்.ஐ.வி.எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஏ.ஆர்.டியில் சிகிச்சை பெறுபவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த 8 நபர்களுக்கு தையல் இயந்திரமும், 5 நபர்களுக்கு சுயதொழில் செய்ய தள்ளுவண்டி, 2 நபர்களுக்கு சிற்றுண்டி கடைக்கு தேவையான பொருட்கள், 1 நபருக்கு வியாபாரம் செய்ய வீடு சுத்தம் செய்யும் பொருட்கள், 2 நபர்களுக்கு வியாபாரம் செய்ய மொத்தம் 18 நபர்களுக்கு ரூ.2.24
இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் வழங்கினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியையும் , எச்.ஐ.வி.எய்ட்ஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவனங்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார். சமபந்தி சிறப்பாக அமைய திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பில் தேவையான முன்னேற்பாடுகளை செய்தனர். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுப்பாடு அலகு மண்டல தடுப்பு அலுவலர் தை.பபிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares