வாசிப்பு திறனை மேம்படுத்திய ஆசிரியர்க்கு பாராட்டு
![]()
ஈரோடு மாவட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்
வாசிப்பை மேம்படுத்துவோம் திட்டத்தின் கீழ், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில், பொது நூலகத்தில் உறுப்பினர்களை அதிகமாக சேர்த்து வாசிப்பு திறனை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், அவல் பூந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வாசிப்பை மேம்படுத்துவோம் திட்டத்தின் கீழ், பொது நூலகத்தில் உறுப்பினர்களை அதிகமாக சேர்த்து வாசிப்பு திறனை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் (30.11.2025) அன்றுவழங்கினார்.
இன்றைய தினம் அவல்பூந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வாசிப்பை மேம்படுத்துவோம் திட்டத்தின் கீழ் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 339 ஆசிரியர்கள் மற்றும் 4782 மாணவர்கள் என அனைவரையும் பொது நூலகத்தில் உறுப்பினராக சேர்த்து அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மொடக்குறிச்சி ஒன்றிய 113 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக ஆசிரியர்களை வாழ்த்தி பேசியும், வாசிப்பின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக் கூறியும், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர். மான்விழி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.பரமசிவம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

