நவம்பர் 27 அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்
![]()
குன்னூரில் நவம்பர் 27 அன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் – மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ வழங்கினார்
கழக இளைஞர் அணி செயலாளர் – இளந் தலைவர் – மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
நீலகிரி மாவட்டச் திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்களின் தலைமையில்
மாவட்ட முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் CTN பாருக் அவர்களின் ஏற்பாட்டில் குன்னூர் அரசு மருத்துவமனையில் நவம்பர் 27ம் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரமும்,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள் நோயாளிகள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் போஜன்,குன்னூர் நகர செயலாளர் ராமசாமி,குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், செயற்குழு உறுப்பினர் சுனிதாநேரு, நகர மன்ற உறுப்பினர்கள் தாஸ்,ராபர்ட், வினோத்,மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் நடன குமார்,நேரு பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்திப், நகர மாணவரணி அமைப்பாளர் பிரதீப், இளைஞர் அணி அக்கீம், சேகர் சீனிவாசன் சுரேஷ்,அஜித்குமார், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

