24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையம்
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் ஜெ.என்.சாலை அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநருமான கே.பி.கார்த்திகேயன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெ.ரேவதி, அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி துணை முதல்வர் என்.திலகவதி, திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

