அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்குடமுழுக்கு விழா
![]()
தாரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா !!!
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தில் அமைந்திருக்கும் நாடார் குலதெய்வம் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா கார்த்திகை மாதம் 14ம் நாள்
30- 11 – 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து 27- 11 – 2025 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பெரியாம்பட்டி அருள்மிகு செம்பு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை குதிரை பசு காளைகள் முன் வர மங்கள வாத்தியங்கள் மற்றும் பம்பை தாரைகள் முழங்க புனித தீர்த்த குடம் புறப்பட்டு திருக்கோயில் வந்தடைந்தது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது மாலை 5 மணிக்கு பிள்ளையார் வழிபாடு விக்னேஸ்வரா பூஜை இறையானை பெறுதல் பூமாதேவி வழிபாடு வாஸ்து சாந்தி நடைபெற்று 28- 11 -2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் மங்கள நல்லிசை பிள்ளையார் வழிபாடு மண் எடுத்தல் முலையிடுதல் திருக்காப்புணிதல் திருக்கலசத்தை அலங்கரித்தல் 30-11 -2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:45 மணிக்கு மேல் 7:45 மணிக்குள் அருள்மிகு பத்திரகாளியம்மன் விமான திருக்குட நன்னீராட்டு மஹா கும்பாபிஷேகம் அருள்மிகு பத்ரகாளியம்மன் கருவறை மூலவர் திருமேனிக்குத் திருவருள் நன்னீராட்டு விழா நடைபெற உள்ளதால் இவ்விழாவில் தக்கார் மா.சுதா செயல் அலுவலர் ஆ.ஜீவானந்தம் பெரியாம்பட்டி நங்கரிபட்டி சிக்கம்பட்டி பொத்தியாம்பட்டி கருக்கப்பட்டி ஊர்களைச் சேர்ந்த உபயதாரர்கள் நான்குகோடி மகா ஜனங்கள் மிராசுதாரர்கள் கட்டளைதாரர்கள் தாரமங்கலம் ஊர் பொதுமக்கள் திருக்கோவில் பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் அனைவரும் பத்ரகாளியம்மன் அருளை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்

