உழவர் நலத்துறை விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

Loading

திருவள்ளூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : 
திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 7500 ஏக்கரில் ரூ.93.73 இலட்சம் மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிடப்பட்டு விவசாயிகளுக்கு தற்போது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒரு கிலோ முழு விலையாக ரூ.129.4 இதில் 50 சதவீதம் மானியத்தில் ரூ.62.50 வழங்கப்பட்டு வருகிறது.
திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26 நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்,பொது சேவை மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்ககு ரூ.545 மட்டும் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
சொர்ணவாரி பருவ நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சொர்ணவாரி பருவ நெல் அறுவடை பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 63 இடங்களிலும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் 6 இடங்களிலும் ஆக மொத்தம் 69 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டிடங்களில் மட்டுமே திறக்கப்பட்டு இதுவரை 75318 மெட்ரிக் டன் நெல் 9734 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம், திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திட்டத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் மூலம் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்கிறது. இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யப்பட்டு பணம் நேரடியாக வங்கி கணக்கு வரவு வைக்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலேயே விளைபொருட்களை விற்பனை செய்ய பண்ணை வாயில் வர்த்தக வசதி உள்ளது. இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் 25 விவசாயிகளுக்கு ரூ.1328770 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் 180-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைபதிவாளரும் செயலாட்சியருமான மீனா அருள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி, வேளாண்மை துணை இயக்குநர் ஸ்ரீசங்கரி, கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் ப.ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares