12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி
![]()
சேலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
1500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு!
சேலம் மறைமாவட்ட கல்வி ஆணையம், சேலம் ரோட்டரி சங்கம் ஜங்சன் கிளை மற்றும் இலொயோலா கலை அறிவியல் கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, ஜெயராணி கலை அறிவியல் மகளிர் கல்லூரி,செயின்ட் ஜோசப் மகளிர், மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய சேலம் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு கல்லூரிகளும், சேலம் மறைமாவட்ட கல்வி ஆணையம், ரோட்டரி சங்கம் தனியார் கல்லூரிகள் இணைந்து இன்று சேலம் மூவேந்தர் அரங்கத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்வில் மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்களை எதிர்கொள்வது எப்படி, தேர்வை அணுகும் முறை, வாழ்வில் முன்னேறுவது எப்படி என்பன பற்றி ‘சிறகை விரி உயர பற, வாசல் திற வானம் பார்’ என்ற தலைப்பில் நான்கு சிறப்புரையாளர்கள் பங்குகொண்டு மாணவர்களுக்குக் கருத்துரை வழங்கினர்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கல் ராஜ் செல்வம், சேலம் மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகள் மேலாளர் கிரகோரி ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை பேச்சாளரும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவரும் இயக்குனருமாகிய, முனைவர் பர்வீன் சுல்தானா சிறப்புப் பேச்சாளராகப் பங்குகொண்டு மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சி, பணிவாய்ப்பு, வாழ்க்கை மேம்பாடுக் குறித்த நேர்மறை எண்ணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் பல்வேறு துறைகளில் புலமையும் அனுபவமும் மிக்க சிறந்த அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்களின் மேற்படிப்பிற்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி உதவினர். பல்வேறு பள்ளிகளிலிருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ, மனைவிகள் கலந்துகொண்டு பயனைடைந்தனர். மேலும் இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பள்ளி,கல்லூரியின் தலைவர்கள், செயலர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

