உப்பளம் தொகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணி
![]()
புதுச்சேரி நவ-29
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணி அனிபால் கென்னடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் அண்மையில் கொசு தொல்லை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நலனை முன்னிட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன
உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி நகராட்சி சுகாதாரத்துறை மூலம் இன்று அதிகாலை மூலப்பகுதிகள், குறுகிய தெருக்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மஸ்கிட்டோ புகை மருந்து (Fogging) பணி எம்எல்ஏ அனிபால் கென்னடி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, இன்று பெரிய பள்ளி மற்றும் இருதய ஆண்டவர் ஆலயம் முழுவது ஆரம்பிக்கபட்டது, இதனை தொடர்ந்து,
வாம்பாகீரபாளையம்
ஆட்டுப்பட்டி
திப்பராயன்பேட்டை
ராசு உடையார் தோட்டம் நேதாஜி நகர் பகுதிகளில் சிறப்பு மருந்து தெளிப்பு நாளை முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தெரிவித்தார்.
கொசு பிரச்சினையால் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, தொடர்ந்து கண்காணிப்பு செய்து தேவையான இடங்களிலும் மருந்து தெளிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி அதிகாரியிடம் சட்ட மன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி, கொசு உற்பத்தியைத் தவிர்க்க வீட்டு வளாகங்களில் நீர் தேக்கம் ஏற்படாமல் கவனிக்குமாறும் சட்ட மன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடன் தொகுதி துணை செயலாளர் நிசார், கிளை செயலாளர் ராகேஷ் , சகோதரர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

