ஏழு கிடங்குகளிலும் வேலை நிறுத்தப் போராட்டம்
![]()
திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிக கழக தொழிலாளர்கள் ஏழு கிடங்குகளிலும் வேலை நிறுத்தப் போராட்டம் : அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அனைத்தும் கிடங்கில் தேங்கும் அவலம் :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிக கழகத்தின் கீழ் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறாமல் இருப்பதை கண்டித்து இன்று தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, மாவட்டம் முழுவதும் உள்ள ஏழு முக்கிய கிடங்குகளின் செயல்பாடு முடங்கியுள்ளது.இந்த போராட்டம் மாநில பொருளாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளான சங்க அங்கீகாரத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

வருகை பதிவேட்டில் சேர்க்கப்படாமல், பெயர் இல்லாமல் பணி செய்து வரும் தொழிலாளர்களின் பெயர்களை உடனடியாக வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும். 10 ஆண்டுகள் பணியை முடித்த தொழிலாளர்களுக்கு பச்சை அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.தொழிலாளர் நலனுக்கு உட்பட்ட பல்வேறு தீர்மானங்களை நிலுவையில் வைக்காமல் அமல்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழு கிடங்குகளிலும் தொழிலாளர்கள் திரண்டு “கோரிக்கை நிறைவேற வேண்டும்” என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரேஷன் கடைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அனைத்தும் லாரிகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்துக்குள் நுகர்வோருக்கு செல்ல வேண்டிய அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விநியோகம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. கிடங்குகள் முன்பு லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டதால், விநியோகச் செயல்முறை முழுவதும் தாமதமடைந்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிலாளர்கள் மற்றும் நுகர்ப்பொருள் வாணிக கழக நிர்வாகத்திற்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என் ஆர் தொழிலாளர்கள் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.