கணக்கீட்டுப்படிவம்73.61%கணக்கெடுப்புபணி நிறைவு
![]()
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டுப்படிவங்கள் 73.61% கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தகவல்-
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(27.11.2025) அன்றுமாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-தொடர்பான பணிகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இச்செய்தியாளர் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
இந்திய தேர்தல் ஆணையத்தால் 27.10.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 04.11.2025 முதல், மொத்தமுள்ள 2222 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இல்லந்தோறும் சென்று உரிய வழிகாட்டுதலுடன் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ள வாக்காளர்களிடம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 73.61% சதவீதம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அதன் விவரங்கள் BLO (App) செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு படிவம் பெற்று, இதுவரை சமர்ப்பிக்காத வாக்காளர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து BLO அல்லது BLA-2 ஆகியோரிடம் 30.11.2025-க்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு படிவங்களை வழங்க 4-ம் தேதி இறுதி நாள். 30.ம் தேதிக்குள் படிவங்கள் திரும்ப பெறும் பணியை முடிக்க உள்ளது. அந்த கணக்கிட்டு படிவங்களை முறையாக பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அல்லது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி உள்ள உதவி மையத்திலோ பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து தங்களுடைய புதிய புகைப்படத்தை ஒட்டி கொடுக்கப்பட வேண்டும். வரக்கூடிய 2025 டிசம்பர் 9ஆம் தேதி வரக்கூடிய வாக்காளர் வரைவுபட்டியலில் தங்கள் பெற்ற இடம் பெற செய்யப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்து, பிப் 7 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
மேலும், இப்படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகங்கள் ஏதுமிருப்பின் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கைபேசி எண்களில் தொடர்புகொண்டோ அல்லது மாவட்ட உதவி மையம்/ தொகுதி வாரியாக பின்வரும் உதவி மைய எண்களை தொடர்புகொண்டோ தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு தங்களது படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட BLO அல்லது BLA-2 ஆகியோரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட இலவச தொடர்பு மையம்-1950

