சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா,
![]()
திருவள்ளூரில் ரூ.3.01 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா, முதல்வர் படிப்பகம் : அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார் :
திருவள்ளூர் நவ 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.01 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் பார்வையிட்டு மின்கல இரயில் உறுதியில் மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார் .
திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கி வைத்தோம் மாணவச் செல்வங்கள் பயன்பாட்டிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கி
இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.வெங்கட்ராமன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

