115 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி கடன் உதவி
![]()
கவரப்பேட்டையில் மாபெரும் கல்வி கடன் முகாமில் 115 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி மதிப்பீலான கடன் உதவிக்கான ஆணைகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் நவ 27 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் கவரப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 115 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி மதிப்பிலான கடன் உதவிக்கான ஆணைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் வழங்கி
பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக் கடன் பெறும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையிலும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகள் இணைந்து கவரைப்பேட்டையில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் இ-சேவை மைய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாமில் கல்விக் கடன் தேவைப்படும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ மாணவியர் பங்கேற்று பயனடையும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் ஏற்கனவே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக கல்விக் கடன் தேவைப்படுபவர்கள் இம்முகாமில் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முகாமில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
115 மாணவ மாணவியருக்கு மொத்தம் ரூ.4.31 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களுக்கான ஆணைகளை நேரடியாக வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1089 கணக்குகளுக்கு ரூ.78 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2025-2026 கல்வியாண்டில், தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கல்விக் கடனுக்கான இலக்கு ரூ.90 கோடியில், நமது மாவட்டம் தற்போது வரை ரூ.193.00 கோடியை கல்வி கடன் எட்டியுள்ளது.உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கனவுகளை எட்டிப்புடிப்தற்காக பெற்ற கல்வி கடன் உதவிகளை தங்கள் நினைத்த பணிகளில் சேர்ந்த பின் அக்கல்வி கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என கூறினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),துரை சந்திரசேகர் (பொன்னேரி), இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ர.சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தென்னரசு, பேராசிரியர்கள், திரளான கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

