விலையில்லா மிதிவண்டி சா.மு.நாசர்வழங்கினார்
![]()
ஆவடி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் நவ 27 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, பருத்திப்பட்டு பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.30.43 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 33/11 கேவி துணை மின்நிலையத்தையும், மிட்டணமல்லி பகுதியில் ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்ட புதிய 16 எம்விஎ மின் மாற்றியையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் திறந்து வைத்தார்.தொடர்ந்து கௌரி பேட்டை பகுதியில் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.25.35 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் பார்வையிட்டு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, காமராஜ் நகர் பகுதியில் ஆவடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முதல் கட்டமாக 11-ஆம் வகுப்பு பயிலும் 475 மாணவியர்களுக்கு ரூ.22,61,000 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் (2025-26) கீழ் 7237 மாணவர்கள் மற்றும் 9877 மாணவியர்கள் என மொத்தம் 17114 மிதிவண்டிகள் ரூ.824.76 லட்சம் மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.மேலும், புதிய பருத்திப்பட்டு 33/11 சேவி துணை மின் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அதிநவீன துணைமின் நிலையம் திருவேற்காடு மற்றும் ஆவடி 110 கேவி துணைமின் நிலையங்களிலிருந்து இரண்டு 33 கேவி ஃபீடர்கள் வழியே மின்சாரம் பெறுகிறது. இது இப்பகுதிக்கு நம்பகமான மற்றும் தங்கு தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்கிறது. இந்த திட்டம் ரூ.30.43 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.மிட் டணமல்லி, முத்தா புதுப்பேட்டை, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பகுதி, பாரதி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட நுகர்வோர் இந்த மேம்பாட்டினால் பயனடைவர் என அமைச்சர் கூறினார்.
இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர்,ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார்,ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, தலைமை பொறியாளர் சென்னை வடக்கு மண்டலம் மாலதி ஸ்ரீ, ஆவடி செயற்பொறியாளர் நரசிம்மன், உதவி செயற்பொறியாளர் பட்டாபிராம் கார்த்திகணேஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலர் லலிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சொ.கற்பகம், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் கே.ரவி, பள்ளி தலைமையாசிரியர் சு.பிரேமா, ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

