13 நபர்கள் கிராம உதவியாளர் பணி

Loading

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கருணை அடிப்படையில் 10 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் 13 நபர்கள் கிராம உதவியாளர் பணி நியமன ஆணைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் வழங்கினார். இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares