சாலைபணிகளைஆய்வு செய்த அனிபால் கென்னடிMLA
![]()
புதுச்சேரி நவ-26
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அனிபால் கென்னடி எம்எல்ஏ
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட கோலாஸ் நகர் பின்புறம், பிரான்சுவா தோப்பு இறக்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு உப்பளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை தொடங்கிட வேண்டுமென வலியுறுத்தினார்.
சட்ட மன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று நகராட்சி அதிகாரிகள் இதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளனர். புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியதில் உள்ளூர் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.
பணிகள் நடைமுறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் இன்று அந்தப் பகுதியில் அதிகாரிகளுடன் இணைந்து பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சேவைக்காக பொதுமக்கள் சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காலப்பன், ராகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

