தாயுமானவர்திட்டத்தை சா.மு.நாசர்துவக்கிவைத்தார்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் ”முதலமைச்சரின் தாயுமானவர் ”திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் 12.08.2025 அன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ”முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவேற்காடு நகராட்சி வடக்கு மாடவீதி, கூட்டுறவு நியாய விலைக்கடை பகுதியில் 12.08.2025 அன்று இத்திட்டத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில் தொடங்கி வைத்து, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை இத்திட்டத்தின் வாயிலாக மொத்தம் 51,543 குடும்ப அட்டைதாரர்களில் 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்தினாளிகள் ஆக மொத்தம் 61,541 குடும்ப அட்டைதாரர்கள் “ முதலமைச்சரின் தாயுமானவர் ”திட்டத்தில் பயன்பெற்று வருகிறனர். ”முதலமைச்சரின் தாயுமானவர் “திட்டத்தில் பயனடைந்த திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு மேட்டு தெரு எண்.424 பகுதியை சேர்ந்த ஒசன்னா குளோர என்பவர் தெரிவித்ததாவது :
என்னையும் என் கணவரையும் போன்ற வயது முதிர்ந்தவர்கள் நியாய விலை கடைகளில் நேரடியாக சென்று நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை பெற்று வீடுகளுக்கு எடுத்துச் செல்வது என்பது மிகுந்த சவாலான ஒரு செயலாகும் இதனை நிவர்த்தி செய்யும் விதமாக நியாய விலை பொருட்களை எங்களது வீட்டின் அருகிலேயே எடுத்து வந்து விநியோகிக்கும் திட்டத்தினை செயல்படுத்த ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களை போன்றவர்கள் மிகுந்த நன்றி உணர்வுடன் மனம் நிறைந்து நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார்.
அதேபோல் முதலமைச்சரின் தாயுமானவர்“ திட்டத்தில் பயனடைந்த திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு மசூதி தெரு எண்.810 தினகரன் என்பவர் கூறுகையில், எனது மகன் போன்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் நியாய விலை கடைகளில் நேரடியாக சென்று நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை பெற்று வீடுகளுக்கு எடுத்துச் செல்வது என்பது மிகுந்த சவாலான ஒரு செயலாகும் இதனை நிவர்த்தி செய்யும் விதமாக நியாய விலை பொருட்களை எங்களது வீட்டின் அருகிலேயே எடுத்து வந்து விநியோகிக்கும் திட்டத்தினை செயல்படுத்த ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகுந்த நன்றி உணர்வுடன் மனம் மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

