வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் விழிப்புணர்வு

Loading

நீலகிரி
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, வாக்காளர்களிடையே சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பல்வேறு கட்டங்களாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில்  108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு  அவர்களின் உத்தரவின்பேரில், உதகை வாக்காளர் பதிவு அலுவலர்/ உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு.டினு அரவிந்த அவர்கள் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ញ់ “THODA GUYS VS KANDAL FOOT BALL ACADEMY” ஆகியோர்களுக்கிடையேயான கால்பந்து போட்டியினை துவக்கி வைத்து பார்வையிட்டர் இந்நிகழ்வில், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / உதகை வட்டாட்சியர்திரு.சங்கர்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares